Wednesday 9 March 2011

மொழிகளுமா??

உன்னைப் பற்றி
கவிதை எழுத தயாரான போது..
என்னை முதலில் பயன்படுத்து,
என்னை முதலில் பயன்படுத்து என
எழுத்துக்கள் எல்லாம்
முண்டி அடித்து கொண்டு
வரிசையில்
சண்டை இட்டுக்கொண்டு நிற்கின்றனவே...
ஒருவேளை
மொழிகள் கூட
உன்னை காதலிக்கின்றனவோ??

Sunday 6 March 2011

ஏனோ??

நான் குடித்து விட்டு
வீடு வந்ததும்,
ச்சி போ என்று
கூறினாய்,
நீ ஒரு மூலையில் படு,
நான் ஒரு மூலையில் படுக்கிறேன்
என்று கூறினாய்..
மறுநாள் காலையில்
நான் கண் விழித்த போது,
ஏனோ என்னை
இறுக்க கட்டி பிடித்தவாறு
தூங்கி கொண்டு இருந்தாய்...

என்ன செய்வேன்??

நான்
உன் இதழ்களை
கடித்து விட்டேன்
என்று கோபம் கொண்டாய்..
சிறிது நேரத்தில்
என் அருகே ஓடி வந்து
நீ தானே காய படுத்தினாய்,
நீயே மருந்து போடு என்று
கூறி விட்டு
பல லட்சம் கோடி
முத்தம் கேட்கிறாயே
நான் என்ன செய்வேன்??

ஓரக் கண்

ஓரக் கண்ணால்
என் இதயத்தினில்
உருஞ்சும் குழல் இட்டு
என் இரத்தத்தினை குடிப்பது
அவளுக்கு மிகவும் பிடிக்கும்...

நான் லூசா??

நான் பொய் சொல்கிறேன்
என்று உனக்கு நன்றாக தெரியும்..
இருந்தும் நான் சொல்கின்ற
கட்டு கதைகளுக்கெல்லாம்
ஒ..ம்ம்..அப்புறம் என்று தலையாட்டி கொண்டிருப்பாய்..
...சற்று நேரத்தில்
நிதானம் இழந்த நீ
"போடா லூசு" என்று என்னை திட்டிவிடுவாய்..

நீ திட்டியதும்
சோகமாய் இருப்பது போல் நடிப்பேன்..
என்னை ஆறுதல் படுத்த
நீயும் என்னென்னவோ செய்வாய்..
இறுதிகட்ட முயற்சியாக
வேறு வழியின்றி
என் இதழில்,உன் இதழ் பொருத்தி
முத்தமிடுவாய்!!

அப்போது உன் காதருகில் சொல்வேன்..
"இப்ப சொல்லு நா லூசா??புத்திசாலியா"??

நான் கோழை!!

அல்லும் பகலும்
உண்ணாது,உறங்காது
அவளுக்கென எழுதி
இன்னும் அவளிடம் கொடுக்காத கவிதைகளும்..

என் வீட்டு விலாசத்தை தொலைத்து,
தெரு தெருவாக அலைந்து,
கடை கடையாக ஏறி இறங்கி
பார்த்து பார்த்து வாங்கி
இன்னும் அவளிடம் பரிசளிக்காத
பரிசு பொருட்களும்..

இன்றும் என்னை கேலி செய்கின்றது
"'நான் ஒரு கோழை என்று""

"அட போடி"

செருப்பு அறுந்து..
வெறும் காலில்
சூடு தாங்க முடியாமல்
சாலையில் நீ குடுகுடு வென
ஓடி வருவதை பார்த்து..

கடையினில் புது செருப்பு வாங்கி..
நான் போட்டிருந்த செருப்பினை
கடைக்கு வெளியிலே மறந்து விட்டு,
ஓடி வந்து
உன்னிடம் கொடுத்தால்,,,

நீயோ இப்படி சொல்கிறாய்,

"இப்பலாம் நேரடியா வந்து
வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுடீங்களா??
வேற மாடல் இருக்கா??"

இதற்க்கு அந்த செருப்பாலேயே
நாலு அடி அடிச்சுருக்கலாம்"

"அட போடி"